Шеърларим тамил тилида

Three poems – Azam Abidov

Azam Abidov Poems
ஆஸம் அபிடோவ் கவிதைகள்
Tamil Translation : Gouthama Siddarthan
தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன்

 

உஸ்பெகிஸ்தானின் தற்கால கவிஞரான ஆஸம் அபிடோவ் (Azam Abidov : 1974 –   ), மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர்,  கட்டுரையாளரும் ஆவார்.  அவரது கவிதை மற்றும் மொழிபெயர்ப்புகள்  தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன.  அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த   சமகால உஸ்பெக் கவிதைகளை  சிறந்த தனித்துவமிக்க குரல்கள் எனப் பாராட்டியுள்ளனர். ஆங்கிலம், அமெரிக்கன், இந்திய, பிரஞ்சு மற்றும் பிற உலக கிளாசிக்கல் மற்றும் சமகால கவிதைகளிலிருந்து அவர் உஸ்பெக் மொழியில் மொழி பெயர்ப்பு செய்த படைப்புகள் உஸ்பெகிஸ்தானில் பாராட்டப்பட்டுள்ளன. ஆசாம் உலகஇலக்கியத்துக்கும் உஸ்பெக் இலக்கியத்துக்கும் இடையில் ஒரு பாலமாக மாற முயற்சிக்கிறார், இளம் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் வட்டத்தை விரிவுபடுத்தி உலக இலக்கியங்களை உஸ்பெக் மொழியிலும் உஸ்பெக் இலக்கியத்தை உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க ஊக்குவிக்கிறார். பல்வேறு இலக்கிய விருதுகளை பெற்றுள்ள இவரது கவிதைகள் ரஷ்ய, ஸ்பானிஷ், அசாமி, பாரசீக, குஜராத்தி, மலையாளம், பல்கேரிய, துருக்கிய, வியட்நாமிய, பிரெஞ்சு மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் (2004) ஒரு கிரியேட்டிவ் ரைட்டிங் ஃபெலோவாக இருந்த அவர், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, கஜகஸ்தான், சுவீடன், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பிரான்ஸ், வியட்நாம், துருக்கி ஆகிய நாடுகளில் கவிதை விழாக்கள், படைப்பு எழுதும் பட்டறைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது தனது மனைவி, மற்றும் மூன்று மகன்களுடன் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் வசித்து வருகிறார்.

 

வேறு ஒரு பறவை 
நான் ஒரு பறவை என்று என்னிடம் சொல்லப்பட்டது,
எல்லாப் பருவங்களும் எனக்குப் பொருந்தும்.
ஒருபோதும் அறிய முடியாத என் சுயத்தை அறிய
வானெங்கும் பறந்து திரியும் இறக்கைகள் இருக்கின்றன.
எனினும், எனக்காகப் பாட வேண்டாம்,
இவ்வளவு புகழ்ச்சியை, நிரப்ப வேண்டாம்.
அதற்கான ஒரு பறவை இருக்கிறது, நீங்கள் அதை விடுவித்தாலும்,
மீண்டும் கூண்டுக்குத் திரும்பும் அது.
தயவுசெய்து, நான் அந்த பறவையைப்போல என்று ஒருபோதும் சொல்ல வேண்டாம்!

 

Bir qush bor

Men bir qushga o’xshar emishman,
Moslik topib har yil fasliga,
O’zimni ham taniyman qisman,
Endi qanot chiqqan aslida.
Faqat meni o’xshatmang hayhot,
Quruq nomga madhiya aytib:
Shunday qush bor, etsang-da ozod
Uchib kirar qafasga qaytib!
Meni o’sha qushga o’xshatmang!

 

There is a bird 

I was told, that I’m a bird,
All the seasons fit to me.
To know myself never I could,
To fly around wings to be.

However, do not sing for me,
So much of eulogy, don’t arrange.
There’s such a bird, you set it free,
But it flies back to the cage.

Please never say I’m like that bird!

 

நிழல்

நான் எப்போதும் நிழலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
தேடலின் தெளிவற்ற இருண்மையில்
என் விழிகளில் உறங்குகிறது வானம்,
துண்டுகளாக சீவப்பட்ட நிலவுடன்.

ஒளிரும் நிழலைக் கண்டுபிடிப்பேன் நான்.
உலகமுடிவின் இறுதி நாளில்,
எல்லாம் மங்கி மறையும்போது,
திறந்த புல்வெளியில் தோன்றும் கடவுளின் நிழல்.

 

Shade 

I always look for shadow
Everything is obscure though
The sky sleeps in my eyes,
The Moon is slice and slice.
I’ll find the right shadow
In the doomsday meadow –
When everything fades,
Be only seen God’s shade.

 

என் தோளில் அமர்ந்திருக்கிறது ஆதிப் பாம்பு
என்னால் கண்களைத் திறக்க முடியாது,
என்னால் உதடுகளையும் திறக்க முடியாது,
கடவுளுக்கு நன்றி சொல்ல.

இது தவிர மழை வலுக்கிறது.

நான் இன்னும் பருமனாக தடித்து வளர்கிறேன்

கடவுள் என் துயரமான இதயத்தில் தூங்குகிறார்.

 

The old serpent is sitting on my shoulder,
I cannot open my eyes,
I cannot open my lips
to thank God.

In addition to this it’s raining.

I am growing stout – what is more.

God is sleeping in my heavy heart.

 

AZAM ABIDOV, poet, translator, short short story writer, was born on November 8, 1974 in Namangan, city of flowers, Uzbekistan. He trained in philology. He has several books of poetry and translation to his credit. Literary scholars and readers have acclaimed his English translations from eminent voices of Uzbek poetry, Usmon Nosir and Chulpon, and contemporary Uzbek poetry. His Uzbek translations from English, American, Indian, French and other world classical and contemporary poetry have also been appreciated in Uzbekistan. One of the founders of the Creative Writing and Translation Club, Azam tries to become a bridge between world and Uzbek literature, widen the circle of young literary translators and encourage them to translate world literature into the Uzbek language and Uzbek literature into world languages. The most successful works by Azam Abidov are Tunes of Asia (English translation of contemporary Uzbek poetry), The Island of Anxiety (poems in Uzbek, English and Spanish), Dream of Lightsome Dawns, A Miracle Is On the Way and I Leave You in Complete Boredom (Uzbek translation of world poetry and fiction). He writes in both Uzbek and English. His poems and translations have appeared in numerous anthologies in Uzbekistan, India, France, Korea, Japan, Vietnam, and Colombia and in many web magazines. Azam’s awards include BBC World Uzbek Service’s award for free speech in Uzbekistan (2005), literary prizes of “Ulughbek” Foundation (1996, 2000); he was a winner of republican contest on Uzbek and Uzbek Literature (1995), winner of poetry contest “My first booklet” among young poets and writers (1990) and winner of the competition “Art Holiday” (1987-1988). Azam’s poems have been translated into Russian, Spanish, Assamese, Persian, Gujarati, Malayalam, Bulgarian, Turkish, Vietnamese, French and Hindi languages. He was a Creative Writing Fellow at the University of Iowa in the U.S. (2004) and attended poetry festivals, creative writing workshops and cultural events in India, U.S.A., Germany, Russia, Kazakhstan, Sweden, Austria, Netherlands, France, Vietnam, Turkey, Armenia and Colombia. In collaboration with Uzbek poet Bahrom Ruzimuhammad, Azam compiled two international poetry anthologies, Fish and Snake and The Language of the Birds, involving hundreds of contemporary poets from around the world. He is also a World Poetry Movement’s coordinator of poetry events in Uzbekistan, and one of the founders of Maysara literary and cultural club at the Yudakov Museum in Tashkent. Azam lives with his wife, journalist and poetess Nodira Abdullaeva and with his three sons in Tashkent, Uzbekistan.

(Гоутама Сиддартан таржимаси)

Three poems – Azam Abidov